ஜம்முவில் 50,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து , ஜம்மு மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜம்மு ஆளுநர் சத்யபால் மாலிக் கூறும்பொழுது,
இங்கு ஒவ்வொருவரின் வாழ்க்கை மதிப்புடையது. இது வரை பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை,அதை ஒரு போதும் விருப்புவதுமில்லை. வன்முறையால் சிலர் காயமடைந்துள்ளனர். பெரியளவில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை இல்லை. தொலைபேசி , இணையம் எங்களுக்கு எதிராக பயன்படுத்தும் ஆயுதமாக இருக்கின்றது. பயங்கரவாதிகள் இடம் பெயர ,அவர்களது கொள்கைகளை பரப்ப பெருமளவில் பயன்படுகின்றது. நாங்கள் குறைவாகவே பயன்படுத்தி வருகிறோம். ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2 , 3 மாதங்களில் அரசு பணி நிரப்பப்பட்டு 50 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுமென்று ஆளுநர் அறிவித்துள்ளார்.