கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பயணிகள் வரத்து குறைந்தது. இதன் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதன் காரணமாக பயணிகள் வரத்து கூடியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று முதல் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.
சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவையும், தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரயில் சேவையும் என்று மொத்தமாக 323 மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20ஆம் தேதி முதல் ஞாயிறுதோறும் 98 மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது.