இரு தரப்பினரிடையே நடந்த இனவாத மோதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தெற்கு சூடானிலிருக்கும் லேக்ஸ் மாகாணத்தில் தெயீத் மற்றும் கோனி என்ற இரு இன குழுக்கள் வசித்து வருகிறார்கள். இந்த இரு தரப்பினரிடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருவதால், அவர்கள் பழிவாங்குதல், கால்நடைகளை வேட்டையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் ரும்பெக் ஈஸ்ட் என்னுமிடத்தில் மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த இரு தரப்பினர் இடையேயான மோதலில் மொத்தமாக 13 பேர் கொல்லப்பட்டதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து அந்த பகுதியில் நடைபெறுகின்ற கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அதிக அளவில் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.