Categories
உலக செய்திகள்

இதுனால எவ்ளோ பாதிப்பு..! எங்களுக்கு இழப்பீடு வேணும்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

வேதி பொருட்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்று திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் கடல் மாசடைந்துள்ளதால் இலங்கை அரசு இழப்பீடு கேட்டுள்ளது.

இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்துக்கு அருகே கடந்த மாதம் குஜராத்திலிருந்து வேதிப்பொருள்கள் மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகியவற்றை ஏற்றி வந்த சிங்கப்பூரை சேர்ந்த “எக்ஸ்பிரஸ் பியர்ல்” என்ற கப்பல் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. அந்த தீ விபத்தில் 25 ஊழியர்கள் கப்பலிலிருந்து பத்திரமாக வெளியே மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பற்றி எரிந்த தீயானது சிறிது நேரத்திற்கு பிறகு அணைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த விபத்தில் சேதமடைந்த அந்த கப்பல் நீரில் பாதி மூழ்கியுள்ளது. இதையடுத்து அந்த கப்பலை அப்புறப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணியானது தோல்வியில் முடிந்துள்ளது. இந்த விபத்தில் கடலில் வேதிப்பொருட்கள் அதிகளவில் கலந்து அவை சூழியலையும் கடுமையாக பாதித்திருப்பதால் கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் வரலாற்றிலேயே இதுவே முதன் முறையாக இலங்கையில் சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்திய மிகப்பெரிய விபத்து ஆகும். எனவே இதுகுறித்து கப்பலின் உரிமையாளர்களிடம் இலங்கை மிகப் பெரிய தொகையை இழப்பீடாக கேட்டுள்ளது. மேலும் இடைக்கால இழப்பீடாக 40 மில்லியன் டாலர் ( சுமார் ரூ.300 கோடி ) வழங்க வேண்டும் என்றும் கப்பல் உரிமையாளர்களை அட்டார்னி ஜெனரல் மூலம் இலங்கை வலியுறுத்தி வருகிறது.

Categories

Tech |