Categories
உலக செய்திகள்

வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு…. பார்ட்டிக்கு போன தாய்… 4 நாட்களுக்கு பின் நடந்த அதிர்ச்சி…!!!

ரஷ்யாவைச் சேர்ந்தவர் வோல்கா பஜிராவோ. இவர் தன்னுடைய கணவனை பிரிந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். ஒரு குழந்தைக்கு 11 மாதங்களும்,  மற்றொரு குழந்தைக்கு மூன்று வயதும் ஆகிறது. இந்நிலையில் வோல்கா தன்னுடைய 11 மாத மகனையும், மூன்று வயது மகளையும் வீட்டில் வைத்து பூட்டி விட்டு நண்பர்களுடன் மது விருந்துக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து 4 நாட்கள் கழித்து வந்து தன்னுடைய வீட்டைத் திறந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் பசியால் அவருடைய 11 மாத குழந்தை இறந்து கிடந்துள்ளது. மேலும் மூன்று வயது மகள் பட்டினியால் பலவீனமடைந்து ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளனர்.

Categories

Tech |