தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு சீமான் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். முன்கள பணியாளர்கள் செய்த பணியால் நோய் பரவல் மெல்ல மெல்ல குறையத் துவங்கி உள்ள நிலையில் அவர்களுடைய செயலை கொச்சைப்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு அமைகிறது என்று குறிப்பிட்டார். மேலும் மதுக்கடைகளை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.