Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வருடம் வருடம் நிங்க தான் வழங்கணும்… இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் அறிவிப்பு…!!

மாநில இளைஞர் விருதுக்கு இணைதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டு தோறும் சுதந்திர தினம் நாளில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதை  வழங்கி வருகின்றனர். இதன் மூலமாக சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாகப் பணியாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரித்தும் வருகின்றனர். இதனையடுத்து விருதுடன் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தையும் வழங்குகின்றனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் இந்த ஆண்டிற்கான மாநில இளைஞர் விருதை சுதந்திர தின விழா அன்று வழங்கப்படவுள்ளனர். எனவே இந்த விருதுகளை பெறுவதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அதன்பின் விருதுகளுக்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான WWW.sdat.tn.gov.in என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிரண் குராலா தெரிவித்துள்ளனர். ஆனால் விண்ணப்பிக்கும் நபர்கள் வருகின்ற 30ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பித்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்கப்படும் என கூறியுள்ளனர். இந்த விருதைப் பெறுவதற்கு 15 வயது முதல் 35 வரை இருக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் சென்ற 2020-2021 வரையிலான நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பாக குறைந்தபட்சமாக ஐந்து வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதில் மாநில, மத்திய அரசுகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளியில் பணியாற்றுபவர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றில் பணியாற்றுபவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது என கூறியுள்ளனர். அதற்கு பின்  விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டு செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |