Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து வரும் குற்றங்களால்… போலீசார் அதிரடி நடவடிக்கை… மேலும் ஒருவர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பலரும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை பகுதியை அடுத்துள்ள பெரியசோளிபாளையத்தில் வைத்து சாராயம் காய்ச்சுவதாக பரமத்திவேலூர் துணை சூப்பிரண்டு அதிகாரியான ராஜரணவீரனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அவரின் உத்தரவின்படி ஜோடர்பாளையம் காவல்துறையினர் பெரியசோளிபாளையத்தில் அதிரடி சோதனையில் செய்துள்ளனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த அர்ஜுனன் என்பவரது வீட்டில் சாராயம் காய்ச்சுவது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவர் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 40 லிட்டர் சாராய ஊறலையும் அழித்துள்ளனர்.

Categories

Tech |