தாலுகா அலுவலகத்தில் ஆவணங்கள் திருடிய குற்றத்திற்காக அதிகாரிகள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த பலரின் ஆவணங்கள் இருந்துள்ளது. இந்நிலையில் நேர்காணல் நடத்துவதற்காக அந்த ஆவணங்களை தாலுகா அலுவலகத்தில் வைத்திருந்தனர். இதனையடுத்து அலுவலர்கள் சிலர் அந்த ஆவணங்களை திருடி இருப்பதாக தெரியவந்துள்ளது. அதனால் இது குறித்து தாசில்தார் பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்படி தாலுகா அலுவலகத்தில் ஆவணங்கள் திருடியதற்காக உளுந்தூர்பேட்டை தேர்தல் துணை தாசில்தார் பாண்டியன், ஆதிதிராவிடர் நல தாசில்தார் தயாளன் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் தசரதன் ஆகிய 3 பேரை கைது செய்ய உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் பின் தாலுகா அலுவலகத்தில் ஆவணம் திருடிய குற்றத்திற்காக காவல்துறையினர் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது சென்ற 2019-ஆம் வருடத்தில் தாலுக்கா அலுவலகத்தில் பாண்டியன், தசரதன் அலுவலராகவும் மற்றும் தயாளன் தாசில்தாராக பணியாற்றி இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.