நடிகை சாக்ஷி அகர்வால் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகை சாக்ஷி அகர்வால் காலா, விஸ்வாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் சாக்ஷி அகர்வாலுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகரித்தது. தற்போது இவர் அரண்மனை-3, சிண்ட்ரெல்லா, புரவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை சாக்ஷி அகர்வால் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
A new look , new day and a new beginning ✨ pic.twitter.com/V51PjTYvH4
— Sakshi Agarwal (@ssakshiagarwal) June 14, 2021
இந்நிலையில் சாக்ஷி அகர்வால் திருமண கோலத்தில் கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதில் ‘புதிய லுக், புதிய நாள், புதிய தொடக்கம்’ என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் விளம்பர படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்டது ஆகும் . ஆனால் சில ரசிகர்கள் சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம் முடிந்துவிட்டது என நினைத்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .