சீனாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்த அலிபாபா குழும தலைவரான ஜாக்மாவின் சொத்து தற்போது பாதியாக குறைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அலிபாபா நிறுவனத்தை உருவாக்கிய, ஜாக் மா உலகம் முழுக்க அதன் கிளைகளை விரிவுப்படுத்தி, மிகப்பெரும் தொழிலதிபராக உயர்ந்தவர். கடந்த வருடத்தில் அலிபாபா நிறுவனமானது, ஆப்பிள், அமேசான் மற்றும் கூகுள் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்திருந்தது.
இந்நிலையில் ஜாக் மாவிற்கு சீன அரசாங்கத்துடன் மோதல் ஏற்பட்டது. அதன் பின்பு அவரின் சொத்து மதிப்புகள் குறைய தொடங்கியது. கடந்த 2020ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில், இந்நிறுவனத்தினுடைய ஒட்டுமொத்த சொத்துக்களின் மதிப்பு $857 மில்லியன் இருந்தது. இந்த ஜூன் மாதத்தின் $588 மில்லியன் ஆக குறைந்து விட்டது.
இதேபோல இவரின் ஆண்ட் குழும சொத்து மதிப்பானது, $470 மில்லியனிலிருந்து, $108 மில்லியனாகிவிட்டது. அதாவது கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் ஷாங்காயில் நடந்த ஒரு நிதி தொழில்நுட்ப மாநாட்டில் ஜாக்மா பங்கேற்றுள்ளார். அப்போது சீனாவின் நிதி நிறுவனங்கள் மீது அரசாங்கம் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மேலும், பழமைவாதிகள், தான் இவ்வாறான விதிமுறைகளை விதிப்பார்கள் என்று கூறியிருக்கிறார். அதன் பின்பு, சீன அரசாங்கம் அவரது அலிபாபா நிறுவனத்திற்கு பல தொந்தரவுகளை செய்திருக்கிறது. அந்த வகையில், ஆண்ட் குழுமத்தின் ஐபிஓ முடக்கப்பட்டது.
இதனிடையே பொது நிகழ்வுகளில் பங்கேற்பதை, ஜாக்மா தவிர்த்துவிட்டார். இதனால் சீன அரசாங்கம் அவரை வீட்டில் முடக்கியதாக, தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.