Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும் நினைக்கல… சோகத்தில் குடும்பத்தினர்… நிவாரண தொகையை வழங்க முதலமைச்சர் உத்தரவு…!!

ஆம்புலன்ஸில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண தொகையை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெயலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 மருத்துவ அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது ஜெயலெட்சுமியுடன் மருத்துவ அவசர ஊர்தியில் அவரின் மாமியார் செல்வி மற்றும் நாத்தனார் அம்பிகா ஆகியோர் சென்றுள்ளனர். அதன்பின்  சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென செயலிழந்து 108  மருத்துவ அவசர ஊர்தி மரத்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஜெயலட்சுமி மற்றும் அவருடன் இருந்த இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து விபத்தில் இறந்த ஜெயலட்சுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் மற்றும் அம்பிகா, செல்வி ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி மூன்று பேரின் குடும்பத்தினருக்கு தாசில்தார் நேரில் சென்று நிவாரண தொகையை வழங்கியுள்ளார்.

Categories

Tech |