Categories
மாநில செய்திகள்

11 மாவட்டங்களில் கிடையாது…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

+1 வகுப்புக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மேல் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக சேர்க்கை நடத்தப்படும். குறிப்பிட்ட பிரிவிற்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வு வைக்கலாம். அந்த பிரிவு சம்பந்தமாக 50 வினாக்கள் கேட்கப்படும் இந்த மதிப்பின் மூலம் பிரிவுகளை ஒதுக்கலாம் என அரசு அறிவித்த நிலையில் இன்று முதல் +1 மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இதில் தளர்வுகள் இல்லாத 11 மாவட்டங்களில் தற்போது பிளஸ் 1 மாணவர் சேர்க்கை இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு சான்றிதழில் ஆல்பாஸ் என்று மட்டுமே இருக்கும். மதிப்பெண் இருக்காது. இதனால் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 27 மாவட்டங்களில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. சேர்க்கை முடிந்தவுடன் பாடத்திட்டங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |