ராமாயணத்தின் 3டி திரைப்படத்தில் 3 மொழியைச் சேர்ந்த பிரபலங்கள் நடிக்க உள்ளனர் .
ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண படங்கள் 1960களுக்கு முன்புதான் அதிகம் எடுக்கப்பட்டது. அதன்பின் அந்த படத்தின் மீதான நாட்டம் குறைந்தது. இந்நிலையில் பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு சரித்திர மற்றும் புராணப் படங்கள் எடுப்பதில் இயக்குனர்களுக்கு அதிகம் ஆர்வம் உருவாகி உள்ளது . அதன்படி 3டி தொழில்நுட்பத்தில் ‘ராமாயணம்’ திரைப்படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த படத்தை திஷ் திவாரி ரவி மற்றும் உதய்வார் இணைந்து இயக்க உள்ளனர் . மேலும் , தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தில் மூன்று மொழியை சேர்ந்த பிரபலங்கள் நடிக்க உள்ளார்கள். இந்த படத்தில் ராமர் மற்றும் சீதை கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகை தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .
இந்நிலையில், நடிகர் ஹிருத்திக் ராமர் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளாவிட்டால், பிரபாசை நடிக்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கில் உருவான “ஸ்ரீராம ராஜ்யம்” படத்தில் நயன்தாரா சீதை வேடம் ஏற்று நடித்ததை போல் , தற்போது தீபிகா அவரைப்போல் சீதையாக நடிக்க உள்ளார்.