சப் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் காவல் நிலையத்தில் சப் – இன்ஸ்பெக்டராக விக்னேஸ்வரமூர்த்தி என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் சேலத்தில் உள்ள கேம்பிலில் இருக்கும் வீட்டில் மயங்கி இருப்பதாக கருமலைக்கூடல் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது விக்னேஸ்வரமூர்த்தி விஷம் குடித்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அவரை உடனடியாக மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவின் கீழ் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சப் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.