Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதல்லாம் பண்ணுங்க… விவசாயிகளுக்கு ஆலோசைனை… வேளாண் இணை இயக்குனரின் தீவிர செயல்…!!

வேளாண் இணை இயக்குனர் ஜெகநாதன் திடிரென ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உதயமாம்பட்டு கிராம புறத்தில் நாற்றங்கால் வயல் அமைந்துள்ளது. இந்த வயலில் இம்மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜெகநாதன் ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது அங்கிருந்த விவசாயிகளிடம் நடவு செய்யும் வயல்களில் பசுந்தாள் பயிர் செய்து உள்ளீர்களா எனவும் விதை நெல் எங்கு வாங்கினீர்கள் எனவும் கேட்டுள்ளார். இந்நிலையில் நாற்றங்காலில் பூச்சி தாக்குதல் உள்ளதா எனவும் ஆய்வு செய்துள்ளார். அதன் பின் அங்கிருந்த விவசாயிகளிடம் நடவுக்கு முன்பு அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 5 கிலோ நுண் உரம் இடவேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை கூறியுள்ளார்.

அதற்கு பிறகு அதே பகுதியில் அமைந்திருக்கும் உளுந்து விதைப்பண்ணை வயலிலும் அவர் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து வடதொரசலூர் கிராமப்புறத்தில் அறுவடை செய்யப்பட்ட உளுந்து விதைகள் தரமாக உள்ளதா எனவும் ஆய்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இம்மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வேளாண் துறை சார்பாக எடுத்தனூர் மற்றும் வாணாபுரம் ஆகிய கிராம புறங்களில் அமைக்கப்பட்டுள்ள மணிலா விதை பண்ணைகளையும் ஆய்வு செய்துள்ளார்.

அப்போது ரிஷிவந்தியம் அருகில் இருக்கும் நூரோலை கிராமப்புறத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டு நெல் மற்றும் கரும்பு பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு பலவிதமான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதன்பின் வாணாபுரம் கிராம பகுதியில் தென்னங்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். பின்னர் ரிஷிவந்தியம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மணிலா விதைகள், தக்கைப்பூண்டு விதைகள், உளுந்து, நெல், கம்பு போன்றவைகளின் இருப்பு குறித்து வேளாண்மை இயக்குனர் ஜெகநாதன் ஆய்வு செய்துள்ளார். மேலும் உயிர் உரங்கள் மற்றும் விதைகளை தகுதியான விவசாயிகளுக்கு மானியத்தின் மூலமாக வழங்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Categories

Tech |