Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதற்கும் டோக்கன் விநியோகம்… அனைத்து கடைகளிலும் ரோந்து… போலீஸ் சூப்பிரண்டின் அறிவுரை…!!

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதை முன்னிட்டு செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண்  தலைமை தாங்கியுள்ளார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு அரசின் உத்தரவின்படி, டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுவதால் மாவட்டம் முழுவதும் இருக்கும் 121 டாஸ்மாக் கடைகளிலும் தடுப்புகள் அமைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து கடைகளுக்கு செல்பவர்கள் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடித்து மது வாங்கி செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து மது கடைகளுக்கு அருகில் இருக்கும் மைதானத்தில் வைத்து ஒரு மணி நேரத்தில் 40 முதல் 50 பேர் வரை மதுபாட்டில்களை வாங்கி செல்வதற்கான டோக்கன்கள் வழங்கப்படும். அதன்பின் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் நபர்கள் கட்டாயம் முக கவசத்தை அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்க வேண்டும். மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காவல்துறையினர் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |