Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற சமயத்தில்… மாற்றுதிறனாளி பெண்ணுக்கு நடந்த கொடுமை… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

மாற்றுத்திறனாளி பெண்ணை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் கூலித் தொழிலாளியான ஸ்ரீபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் ஸ்ரீ பால் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

தற்போது இரண்டு மாத கர்ப்பமாக இருக்கும் அந்த மாற்றுத்திறனாளி பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஸ்ரீ பாலிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளி பெண்ணை மிரட்டி உள்ளார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான ஸ்ரீ பாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |