கொரோனா இரண்டாவது அலை தொடர்ந்து பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என அனைவரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். இந்நிலையில் நடிகர் யோகிபாபு தடுப்பூசி எடுத்துக்கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்து சிலருக்குத் தயக்கம் இருக்கும் காரணத்தால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் போது எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.