மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி பகுதியில் மணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல்அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக அதே வசிக்கும் கலியபெருமாள் என்பவருடன் அங்கு சென்றுள்ளார். அதன்பின் உறவினரை பார்த்துவிட்டு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்ற லாரி இவர்களின் மோட்டார் சைக்கிளில் மீது மோதி விட்டது.
இந்த விபத்தில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதில் கலியபெருமாள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த கலியபெருமாளை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்த சுரேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு காவல்துறையினர் செய்த இந்த விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.