தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழித் திரைப்படங்களில் நடிகை ராஷி கண்ணா பிஸியாக நடித்து வருகிறார்.
ஹிந்தி திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் கபே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதன்பின் இவர் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இதையடுத்து நடிகை ராஷி கண்ணா கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
தற்போது இவர் துக்ளக் தர்பார், அரண்மனை 3, மேதாவி, சர்தார் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் தேங்க்யூ, பக்கா கமர்சியல் ஆகிய தெலுங்கு படங்களிலும் பிரம்மம் என்ற மலையாள படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் ஹிந்தியில் 2 வெப் தொடர்கள் மற்றும் 2 படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் நடிகை ராஷி கண்ணா சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.