Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளியில் சேர… ஆர்வம் காட்டும் தனியார் பள்ளி மாணவர்கள்…!!!

சென்னையில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் அரசு பள்ளிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறித்து வந்த காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே கொரோனா காரணமாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் பலரும் பொருளாதார ரீதியாக அதிக அளவு பாதிப்பை சந்தித்துள்ளனர். மீண்டு எழுந்துவரும் சூழ்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்தது. இதன் காரணமாக மேலும் பொருளாதார ரீதியாக பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றன.

தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு போதிய  பணம் இல்லாத காரணத்தினால் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல், தொடர்ந்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்து வருவதால், பெண் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Categories

Tech |