Categories
உலக செய்திகள்

“மெக்சிகோவில் அதிர்ச்சி” இரவு விடுதியில் பெட்ரோல் குண்டு தாக்குதல்… 23 பேர் உடல் கருகி பலி..!!

மெக்சிகோவில் இரவு விடுதிக்குள் நடந்த பெட்ரோல் குண்டு தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மெக்ஸிகோவின் வளைகுடா கடற்கரை நகரமான கோட்ஸாகோல்கோஸில் ஒரு இரவு விடுதி வழக்கம் போல செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அந்நாட்டு நேரப்படி கடந்த ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை  அன்று இரவு திடீரென ஒரு கும்பல் விடுதிக்குள் நுழைந்து பெட்ரோல் குண்டுகளை வீசியது.  பெட்ரோல் குண்டு வெடித்து தீ பிடித்ததில் 15 ஆண்கள், 8 பெண்கள்  சேர்த்து மொத்தம் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

Image result for 23 people killed in bomb blast at nightclub in Coatzacoalcos, southern Mexico

மேலும் தீக்காயங்களுடன்  13 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கெனவே இந்த மாதத் தொடக்கத்தில் மெக்சிகோவின் மேற்கு நகரமான உருபானில் இது போன்ற தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

Image result for 23 people killed in bomb blast at nightclub in Coatzacoalcos, southern Mexico

அதைதொடர்ந்து  நடந்த தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளதால்  மெக்சிகோவில் 2006-2012 காலகட்டங்களில் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கிடையே அவ்வப்போது நடந்த போரின் வன்முறைகள் தற்போது  நினைவூட்டுவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |