கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் தண்டவாளத்தில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் இறந்து கிடக்கும் வாலிபர் ஒடிசா மாநிலத்தில் வசிக்கும் ஆனந்தகுமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதன்பின் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரயிலில் அடிபட்டு ஆனந்தகுமார் உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.