நடிகர் பிரபாஸ் ஒரே மாதத்தில் சலார் படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகுபலி என்ற பிரமாண்ட படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரபாஸ். தற்போது இவர் சலார், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் சலார் படத்தை கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் மது குருசாமி வில்லனாக நடிக்கிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் ஒரே மாதத்தில் சலார் படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதம் ஆதிபுருஷ் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பதால் பிரபாஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.