Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கம்…. ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி…..!!!!

அதிமுகவில் இருந்து பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட 15 பெயரை நீக்கி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் அதிமுக செய்தி தொடர்பாளர், கழக புரட்சித்தலைவி பேரவை இணை செயலாளர் புகழேந்தி இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுகொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |