Categories
உலக செய்திகள்

“ஹலோ தாத்தா, எப்படி இருக்கீங்க ?”… மாமனாரை செல்லமாக அழைத்த இளவரசி… வைரலாகும் வீடியோ காட்சி..!!

தனது மாமனாரான சார்லஸை, இளவரசி கேட் மிடில்டன் “தாத்தா” என்று செல்லமாக அழைக்கும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

பிரித்தானியாவில் நடந்த ஜி-7 மாநாட்டில் முக்கியமான விஷயங்கள் குறித்து ஆராய்ந்த உலக தலைவர்கள் ஈடன் ப்ரொஜெக்ட் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். அதில் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் பிரித்தானிய மகாராணி எலிசபெத், இளவரசி கமிலா, இளவரசர் சார்லஸ் ஆகியோர் முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியினர் வேகமாக பின்னால் வந்தனர்.


பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், மகாராணியார் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்று அவர்களிடம் பேசியுள்ளார். அந்த சமயத்தில் திடீரென திரும்பி பார்த்த சார்லஸை இளவரசி கேட் மிடில்டன் “ஹலோ தாத்தா, எப்படி இருக்கீங்க ?” என்று செல்லமாக அழைத்து பேசிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையில் தனது பேரக் குழந்தைகள், மகன்-மருமகள் என அனைவர் மீதும் சார்லஸ் அதிக அன்பு கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |