Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்.. 7 பேர் உயிரிழந்த சோகம்..!!

ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமையன்று சாலையில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஏழு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளார்கள். இது தொடர்பில் அவர்கள் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். அதில் ஷியா அமைப்பினர் இரண்டு சிற்றுந்துகளில் சென்றபோது கண்ணிவெடிகளை வைத்து எங்கள் இயக்கம் தாக்குதல் நடத்தியது என்று தெரிவித்துள்ளனர்.

தலைநகர் காபூலில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் தொடர்ந்து கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் பயணிகளுடன் சென்ற சிற்றுந்தை குறி வைத்து கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஆழம் மிகுந்த பள்ளத்தாக்கில் விழுந்து சிறுவர்கள் மூவர் உட்பட 11 நபர்கள் பலியாகியுள்ளனர்.

Categories

Tech |