Categories
தேசிய செய்திகள்

உலகத் தலைவர்களுக்கு… பிரதமர் மோடி வேண்டுகோள்…!!!

கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவை நாள் நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதன் காரணமாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்தால் படிப்படியாக தளர்வுகளை அந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உலக நாடுகள் பல கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு காப்புரிமையை வழங்கியுள்ளது.

இதனால் இந்த காப்புரிமைகளை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டுமென பிரதமர் மோடி உலக நாடுகளில் உள்ள தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்படி செய்தால் மருந்துகள் அனைத்து நாடுகளுக்கும் சென்று கொரோனா தொற்றைத் தடுக்க, அனைத்து மக்களுக்கும் சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும் என கூறியுள்ளார். இதை கருத்தில் கொண்டு உலக தலைவர்கள் கொரோனா மருந்துகளுக்கான காப்புரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Categories

Tech |