Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுடனான எல்லை மூடல் ….மேலும் தடையை நீட்டிக்கும் பிரபல நாடு …!!!

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவுடனான போக்குவரத்து தடையை வங்காளதேசம் மேலும் நீடிக்க இருப்பதாக தகவலை வெளியிட்டுள்ளது .

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா  வைரஸ் 2 ம் அலையின்  தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதன்காரணமாக இந்தியாவுடனான போக்குவரத்துக்கு வங்காளதேசம் தடை விதித்திருந்தது . அத்துடன் இந்தியாவுடனான எல்லைகளையும் மூடியது. இதன்பிறகு வங்காளதேசத்தில் தொடர்ந்து 2 முறை இந்தியாவுடனான எல்லை அடைப்பு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் டெல்டா வகை கொரோனா  வைரஸ் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது .இதுகுறித்து வங்காளதேசத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்தியாவுடனான எல்லை  திறப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த விவாதத்தில் இந்தியாவுடனான எல்லை அடைப்பு தொடர்ந்து நீடிக்க வங்காளதேசம் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது வங்காளதேசத்திலும் கொரோனா  வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதாலும், குறிப்பாக அங்கு டெல்டா வகை கொரோனா வைரசால் அதிக பேர் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வங்காளதேசம்  – இந்தியா இடையேயான எல்லை பகுதி  எல்லைகள் அடைக்கப்பட்டிருந்தாலும், 15 அல்லது அதற்கு குறைவான நாட்களுக்கு  செல்லுபடியாகும் விசா கொண்ட  வங்காளதேசத்தின் குடிமக்கள் தங்களுடைய  நாட்டுக்குத் திரும்பி வர  அனுமதிக்கப்படுவார்கள். ஆனால்  அவர்கள் 14 நாட்கள்  தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்தப்படுவார்கள் உட்படுத்தப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |