வாடகைக்கு பார்த்த வீட்டில் பேய் இருந்ததாக ஒரு பெண் இணையதளத்தில் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sarah Vanderbilt என்பவர் StreetEasy என்ற இணையதளம் மூலமாக வீடு ஒன்றை வாடகைக்கு தேடியிருக்கிறார். அப்போது Virtual Tour வாயிலாக ஒரு வீட்டின் அறைகளை பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அந்த வீடு மிக பிரம்மாண்டமாக இருந்துள்ளது. அப்போது படுக்கையறையை பார்த்த Sarah அதிர்ந்துவிட்டார்.
அங்கு ஒரு பெண் படுத்திருந்துள்ளார். ஆனால் சில நிமிடங்களில் அந்த உருவம் காணாமல் போனது. எனவே Sarah, தன் டிக்டாக் பக்கத்தில் இது தொடர்பில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு வீடு வாடகைக்கு பார்த்துக்கொண்டிருந்தேன்.
StreetEasy என்ற இணையதளத்தில் Virtual Tour மூலமாக மிகவும் பிரம்மாண்டமாக இருந்த அந்த வீட்டின் படுக்கையறையை காண சென்றால், ஒரு பெண் படுத்திருந்தார். அடுத்த சில நிமிடங்களில் அந்த உருவம் மாயமானவுடன் அதிர்ச்சியடைந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.