நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.
இதனைத்தொடர்ந்து இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில் பள்ளிகளில் பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 27 மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்களுடன், பிற பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு சுழற்சி முறையில் வரவேண்டும். குறைந்தது 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.