குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கியை சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது . இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவாங்கி. தற்போது இவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சிவாங்கி, அஸ்வின் இருவரும் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளனர் . அப்போது சிவாங்கியிடம், விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் எது? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ‘மாஸ்டர்’ என சரியாக பதிலளித்துள்ளார்.
Update கூட கேப்பாங்களே 😂😂@Troll_Cinema | #Master pic.twitter.com/feCKnvVPZx
— TC (@TrollCinemaOff) June 11, 2021
ஆனால் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் எது என்ற கேள்விக்கு சிவாங்கி சிரித்துக்கொண்டே விவேகம், வேதாளம் என பதிலளித்தார் . அதுமட்டுமின்றி நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் படத்தின் பெயரை கூட சிவாங்கி கூறவில்லை. இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சிவாங்கியை திட்டி வருகின்றனர். மேலும் சிலர் சிவாங்கி வெகுளித்தனமாக கூறிய பதிலை வைத்து அவரை திட்ட வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.