Categories
மாநில செய்திகள்

வண்டலூரில் பூனைகளைப் பிடிக்கும் பணி தீவிரம்…. வனத்துறையினர் தகவல்…!!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது .அதில் ஒன்பது சிங்கங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா  உறுதியானது. இதில் நிலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது.  மற்ற சிங்கங்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் இரண்டு சிங்கங்களுக்கு,சார்ஸ் கோவிட்-2 ‘கெனைன் டிஸ்டம்பர்’ என்ற  புதிய வகை தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் அவற்றை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சிங்கங்களுக்கு எப்படி தோற்று பரவியது என்று சந்தேகம் எழுந்தது. அப்போது பூங்காவில் சுற்றும் தெருபூனைகள் இதற்கு காரணமாக இருக்குமா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பூங்காவில் சுற்றித்திரியும் பூனைகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது தெருபூனைகள் மூலம் சிங்கங்களுக்கு நோய் தொற்று பாதிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும் சரியான காரணம் தெரியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |