Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… வீட்டில் செய்த வேலை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக சாராய ஊறல் போட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு பாரதி நகர் பகுதியில் வசிக்கும் காளிமுத்து என்பவர் தனது வீட்டிற்குப் பின்புறம் சாராய ஊறல் போட்டு வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 5 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்து விட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காளிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |