Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கண்டுபிடிக்காம விட மாட்டோம்… இறந்த அரியவகை விலங்கு… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கழுதைப்புலி உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சாலையோரம் அரிய வகை கழுதைப் புலி இறந்து கிடப்பதாக மசினகுடி வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர் ராஜேஷ் போன்றோர் அங்கு விரைந்து சென்று கழுதை புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்து கிடப்பது 8 வயதான ஆண் கழுதை புலி என்றும், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்து இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் கழுதைப்புலியின் இறப்பிற்கு காரணமான அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |