Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப பயமா இருக்கு… இங்கயே சுற்றி வருது… அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொட்டபாடி கிராமத்திற்குள் இரவு நேரத்தில் 2 காட்டு யானைகள் நுழைந்து விட்டது. இந்த காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தி உள்ளது.

மேலும் இந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். பின்னர் அதிகாலை வேளையில் காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள காபி தோட்டத்திற்குள் நுழைந்து விட்டது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Categories

Tech |