Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லாம் கரெக்டா கிடைக்குதா…? 2400 குடும்பங்களுக்கு கொடுத்தாச்சு… நகராட்சி ஆணையாளரின் எச்சரிக்கை…!!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நகராட்சி ஆணையாளர் அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நகராட்சி பகுதியில் 55 இடங்கள் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, இதுவரை கூடலூர் நகராட்சி பகுதியில் 2400 குடும்பங்களுக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ய 160 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொற்று அறிகுறிகள் இருக்கும் நபர்களின் விவரத்தை சேகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியே சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்..

Categories

Tech |