Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

5 வருடமாக காதலித்த ஜோடிகள்… பாதுகாப்பு கேட்டு… காவல்நிலையத்தில் தஞ்சம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் பகுதியில் விஜய்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். பி.இ படித்த இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விஜய்யும் தோப்புக்காடு பகுதியில் வசிக்கும் கவுசல்யா(21) என்ற பெண்ணும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.இதனை அறிந்த கவுசல்யாவின் பெற்றோர் அவசர அவசரமாக அவருக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து விஜய்யும் கவுசல்யாவும் நேற்று குயவன்குடி அருகில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து இருவரும் பாதுகாப்பு கேட்டு ராமநாதபுரம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் மகளிர் போலீசார் விசாரணை செய்து இருவரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து செய்து அவர்களுடன் திருமண ஜோடியை அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |