நடிகர் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் பிரேம்ஜி வல்லவன், சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாநாடு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரேம்ஜி பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
Tamil Rockers Coming Soon #TamilRockers @JsamCinemas @Praveenravikum5 pic.twitter.com/ukRXUjgSbP
— PREMGI (@Premgiamaren) June 14, 2021
இந்நிலையில் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குனர் பரணி ஜெயபால் இயக்கும் இந்த படத்திற்கு ‘தமிழ் ராக்கர்ஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது . மேலும் ஜஸ்வந்த் சூப்பர் சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார் . தற்போது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.