பள்ளிகளில் பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வருவதால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களின் நலன் கருதி பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி பள்ளிகளில் பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ள 17 மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்களுடன், பிற பள்ளி ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு சுழற்சிமுறையில் வரவேண்டும். கொரோனா குறைந்த பிறகு 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவித்துள்ளது.