முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் இடம்பெற்ற டாக்கு லெஸ்ஸு வொர்க் மோரு வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் சாந்தனு சக்கரக்கட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் சாந்தனு ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார்.
#TalkuLessuWorkuMoreu video from #MurungakkaiChips OUT NOW! 🥳
➡️ https://t.co/UE0e1iaush@FirstManFilms @imKBRshanthnu @AthulyaOfficial @dharankumar_c @Srijar_Director @sivaangi_k @LIBRAProduc @samvishal280999 #KuKarthik pic.twitter.com/zovvav40Yj
— Sony Music South (@SonyMusicSouth) June 14, 2021
மேலும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீஸர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகியிருந்தது. இதில் சூப்பர் சிங்கர் பிரபலங்கள் சிவாங்கி, சாம் விஷால் இணைந்து பாடிய ‘டாக்கு லெஸ்ஸு வொர்க் மோரு’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.