மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வாகனங்களின் கண்ணாடியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அன்னை தெரசா நகர், பாரதி நகர், ராஜீவ் நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டின் முன்பு வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் காலையில் இந்த வாகனங்களில் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
அந்த விசாரணையில் ஒரு ஆட்டோ, ஒரு வேன் மற்றும் 9 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்த போது, மர்ம நபர்கள் சிலர் காரின் கண்ணாடியை உடைத்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.