சேதமடைந்து இருக்கும் தரை பாலத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேடப்பட்டி-துங்காவி சாலையில் தரை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் இந்த தரைப்பாலம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனை அடுத்து பாலத்தின் கைப்பிடி சுவர்கள் சேதமடைந்ததோடு, கான்கிரீட் பூச்சுகள் விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றது.
மேலும் இப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்லும் போது அருகில் இருக்கும் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் வேடப்பட்டி பகுதியில் சேதமடைந்து இருக்கும் தரை பாலத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.