விருச்சிகம் ராசி அன்பர்களே.! உயர்வு ஏற்படும்.
இன்றைய நாளில் விரயங்கள் கூடும். துணிந்த முடிவால் தொழில்கள் வளர்ச்சி அடையும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றியடையும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்யோக உயர்வு ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியை கொடுக்கும். பணவரவு பூர்த்தியாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக பணிச்சுமை இருக்கும். பாராட்டும் புகழும் அதிகரிக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி விடும். திருமணம் தொடர்பான பேச்சுகள் இல்லத்தில் நடைபெறும்.
காலை நேரத்தில் கலகலப்பான செய்திகள் வந்து சேரும். காதலில் உள்ளவர்களுக்கு இனிமையான நாள். காதலில் வெற்றியை பெறமுடியும். பெண்கள் இன்றைய நாள் எதிலும் எதையும் திறம்பட செய்து முடிக்க முடியும். மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். துணிச்சல் கூடும். கல்வி பற்றிய அக்கறை ஏற்படும். இந்த முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கரு மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கரு மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியில் ஈடுபட்டாலும் வெற்றி என்பது எளிமையாக கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் கருநீலம்