நெல்லை கூடங்குளம் பகுதியில் கள்ளக்காதல் ஜோடிகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியிலுள்ள சங்கரன்புதூரில் சுரேஷ்குமார் என்பவர் வசித்துவந்துள்ளார். இவர் தேரூர் பஞ்சாயத்தில் குப்பை வண்டி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவரது மனைவி வித்யா தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து வித்யாவிற்கு 2 மகள்களும் உள்ளனர். இதனை தொடர்ந்து சுரேஷ்குமாரும், வித்யாவும் ஒரே பகுதியில் வேலை செய்வதால் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்த சந்திப்பு அவர்கள் இடையே கள்ளத்தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அறிந்த சுரேஷ்குமாரின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சுரேஷ்குமாருக்கு சில மாதங்கள் முன்பு நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் சில மாதம் மனைவியுடன் இருந்த சுரேஷ்குமார் மீண்டும் நித்யாவுடன் பேசியுள்ளார். இதனை அறிந்த வித்யாவின் கணவரும் அவரை கண்டித்துள்ளார். ஆனால் சுரேஷ் மீது இருந்த மோகத்தால் கடந்த இரண்டு மாதங்கள் முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நெல்லை மாவட்டத்திலுள்ள கூடங்குளம் பகுதியில் குடியேறி உள்ளனர்.
மேலும் வித்யாவை காணவில்லை என சுசீந்திரம் காவல் நிலையத்தில் அவரது கணவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் கூடங்குளம் பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் வருவதை அறிந்த கள்ளக்காதல் ஜோடிகள் உடனடியாக விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் உயிரிழந்துள்ளார். மேலும் அவருக்கு வித்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் குறித்துபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.