Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இதனால உயிருக்கே ஆபத்து… நடைபெற்ற தூய்மை பணிகள்… பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு…!!

விஷ பூச்சிகள் மற்றும் பாம்புகள் நடமாடுவதால் காவல்நிலைய வளாகத்தை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல்நிலையம், மாமல்லபுரம் காவல் நிலைய பின்புற வளாகம் போன்ற பகுதிகளில் செடிகளும், புதர்களும் அதிகளவில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்களும் அங்கு உள்ள மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் விஷப்பூச்சிகளும், பாம்புகளும் நிறைந்து காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகளிர் காவல் நிலைய வளாகத்தில் இருக்கும் முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்ததோடு, கிருமிநாசினி தெளிக்கும் பணியில்  துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சுத்தம் செய்யப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் துப்புரவு பணிகளை மேற்கொண்ட காவல்துறையினரையும், தூய்மை பணியாளர்களையும் பாராட்டியுள்ளார்.

Categories

Tech |