இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரத்த தானம் செய்துள்ளார்.
ரத்ததான தினத்தையொட்டி அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . அத்துடன் சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலரும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . குறிப்பாக இந்த கொரோனா தொற்று காலத்தில் ரத்தம் தானம் செய்வது நோயாளிகள் சிகிச்சைக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரத்ததானம் செய்து கொண்டார். அவர் ரத்த தானம் செய்து கொண்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் .
https://twitter.com/sachin_rt/status/1404371484844314626