கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுத்து மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இதில் முக்கிய பங்கு வகிக்கும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் வரை கல்வி பயில்கின்றனர். நாளொன்றுக்கு தலா 2 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடந்தாலும் அதனை காரணமாக பயன்படுத்தி குழந்தைகள் நாள் முழுவதிலும் மொபைல் போன் பயன்படுத்திவருகின்றனர்.
குழந்தைகளிடம் மொபைல் போனிற்கு அடிமையாகும் அளவிற்கு பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனிடையே மொபைல் போனை பயன்படுத்தும்போது யூடியூப் மற்றும் புதிதாக உள்ள ஆன்ட்ராய்டு ஆஃப்களை டவுன்லோடு செய்து அதன் மூலமாக கேம்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் போது அதில் ஆபாச விளம்பரங்களும், படங்களும் திடிரென வந்து செல்லும் இதனால் குழந்தைகளின் மனோபாவம் மாறக்கூடிய ஆபத்தான நிலை உருவாகிவிடும் எனவே இதனை பெற்றோர்கள் கவனித்து தடுக்காவிட்டால் பேராபத்தில் முடிந்துவிடும்
ஆபாச விளம்பரங்கள், புகைப்படங்கள், வீடியோக்களை தவிர்க்க பின்வரும் முறைகளில் மொபைல் போனை பயன்படுத்துங்கள்.
யூடியூப்பில் உங்களது பக்கத்திற்கு சென்று அதில் SETTINGS -ஐ கிளிக் செய்து அதில் GENERAL – ஐ கிளிக் செய்து அதில் RESTRICTED MODE என்பதை ஆன் செய்யவும். இதனையடுத்து ஆபாச வீடியோக்களோ, விளம்பரங்களோ வருவது முழுமையாக நிறுத்தப்படும். NAME – GENERAL- SETTING – RESTRICT MODE – ON இதேபோல் கேம் மற்றும் ஆபாசம. தொடர்பான மொபைல் ஆஃப்கள் டவுண்லோட் செய்வதை தவிர்க்க
PLAYSTORE – ல் உள்ள SETTINGS – ல் Parental control என்பதை கிளிக் செய்யவும் அப்போது PIN நம்பர் கூட கேட்கும் போது உங்களது 4இலக்க ரகசிய எண்ணை இருமுறை பதிவுசெய்தால் அதனையடுத்து APPS & GAMES என்பதை கிளிக் செய்யவும் அதில் 3+ முதல் 18+வரையிலான தேர்வுகள் வரும் அதில் 12+வரையிலான பகுதிகளை மட்டும் தேர்வுசெய்தபின் கீழேயுள்ள SAVE என்பதை கிளிக் செய்யவும். இதேபோல் FILMS என்பதை தேர்வுசெய்து அதில் U முதல் S வரையிலான பகுதிகளில் U என்பதை மட்டும் தேர்வு செய்த பின் SAVE செய்யவும். இதனையடுத்து உங்களது போனில் ஆபாசம. சார்ந்த எந்த விளம்பரமோ, ஆஃப்களோ, வீடியோக்களோ வராது!!!
PLAYSTORE – SETTINGS – PARENTAL CONTROL – PIN (2TIME) – APPS&GAMES – 12+ THEN CLICK SAVE THEN SELECT FILMS – U Then SAVE ஐ கிளிக் செய்யவும். இதனையடுத்து குழந்தைகளிடம் மொபைல் போன்களை தாராளமாக கொடுக்கலாம் ஆன்லைன் வகுப்புகளுக்கு மட்டுமே மற்ற நேரங்களில் போனை கொடுப்பதை தடுங்கள் இதேபோல் குழந்தைகளை சாப்பிட வைக்கவோ, உறங்க வைப்பதற்காகவோ ஆன்ட்ராய்டு போன்களை கொடுப்பதால் போனில் உள்ள கவனம் காரணமாக என்ன உணவுகளை உண்கிறோம் என்ன சுவை என்ற உணர்வுகளை இழக்க நேரிடும்.
இதேபோன்று உறங்கும்போது செல்போனை பார்ப்பதால் கண்களில் பிரச்சினை ஏற்படுவதோடு, மொபைலில் வரும் வீடியோக்களை பார்த்து இரவில் அந்த உணர்வோடு உறங்கி திடீர் திடீரென அலறியபடி எழுந்திருக்கும் மன அளவிலான பயம் ஏற்படும். ஆன்ட்ராய்டு போன்களோடு குழந்தைகள் வாழ வேண்டிய நிலை உருவாகிவிட்டாலும் கூட இதுபோன்ற நடவடிக்கைகளை மேற கொண்டால் ஆபத்தை தவிர்க்கலாம் என்பதே உண்மை. உங்கள் அனுமதியின்றி குழந்தைகள் செல்போனை பயன்படுத்துவது மிகப்பெரிய ஆபத்து என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.