Categories
தேசிய செய்திகள்

SBI- வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…. அதிரடி அறிவிப்பு….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது டெபிட் கார்டு தொலைந்தால், காலாவதி ஆனால், சேதம் அடைந்தால் இனி கவலைப்பட தேவையில்லை. நீங்கள் புதிய டெபிட் கார்டு பெறுவதற்கு மிகவும் எளிமையாக ஆன்லைனில் விண்ணப்பித்தால் போதும்,ஏழு முதல் எட்டு நாட்களில் நீங்கள் வங்கியில் பதிவு செய்த அதே முகவரி அல்லது புதிய முகவரிக்கு வந்து விடும். இதனைப் போல வாடிக்கையாளர்கள் செல்போன் எண்ணை புதுப்பிப்பதற்கான வசதியையும் எஸ்பிஐ செய்துள்ளது.

Categories

Tech |